Home One Line P1 ஐபிஎப் சம்பந்தன் மறைவு : வியாழக்கிழமை இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன

ஐபிஎப் சம்பந்தன் மறைவு : வியாழக்கிழமை இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன

825
0
SHARE
Ad

செமினி – கடந்த செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 15) இரவு மாரடைப்பால் காலமான ஐபிஎப் கட்சியின் தேசியத் தலைவர் செனட்டர் டத்தோ எம்.சம்பந்தனின் இறுதிச் சடங்குகள் இன்று வியாழக்கிழமை (அக்டோபர் 17) காலை  மணி 11:00 தொடங்கி மதியம் 2:00 வரை கீழ்க்காணும் அவரது இல்ல முகவரியில் நடைபெறும்:

No.5, Jalan Selamat,

Taman Jaya 43500 semenyih

#TamilSchoolmychoice

சில நாட்களுக்கு முன்னர் இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட சம்பந்தன் தலைநகர் தேசிய இருதயக் கழக மருத்துவமனையில் தங்கி உடல் தேறி வந்தார். எனினும் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட திடீர் மாரடைப்பினால் அவர் காலமானார்.

அவருக்கு எம்.ஜெயலெட்சுமி (வயது 52) என்ற மனைவியும் மூன்று மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றார்கள்.

சம்பந்தனின் நல்லுடலுக்கு அஞ்சலி செலுத்த நேற்று புதன்கிழமை இரவு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், உதவித் தலைவர் டத்தோ மோகன் மற்றும் மஇகாவின் தலைவர்கள் பலரும் செமினியிலுள்ள அன்னாரின் இல்லத்திற்கு வருகை தந்தனர்.

54 வயதே நிரம்பிய அவர் திடீரென மாரடைப்பால் காலமாகியுள்ள செய்தி ஐபிஎப் தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அவரது மறைவு குறித்து தமிழகத்தின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அனுதாபச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

மஇகா தேசியத் தலைவர் விக்னேஸ்வரனும் “இந்திய மக்களுக்காகப் போராடியவர், அவர்களுக்காக உரத்துக் குரல் கொடுத்தவர் சம்பந்தன்” என தனது அனுதாபச் செய்தியில் புகழாரம் சூட்டியுள்ளார்.