புது டில்லி: கடந்த ஒரு வாரமாக டில்லியை சூழ்ந்துள்ள காற்று மாசுபாட்டிற்கு மிகப் பெரிய காரணங்களில் ஒன்றாக, இந்தியாவில் விவசாயிகள் பயிர்களை சட்டவிரோதமாக எரிப்பதாகும்.
அடுத்த இரண்டு வாரங்களுக்கு இது தொடரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பண்ணை, பயிர்களுக்கு உச்சநீதிமன்ற தீ மூட்டக்கூடாது என்று உத்தரவிட்ட போதிலும் தொடர்ந்து தீ மூட்டப்படுவதாகக் கூறப்படுகிறது.
டில்லி மிக நீண்ட அபாயகரமான காற்றின் தரத்தை அனுபவித்து வருகிறது. கடந்த ஒன்பது நாட்களாக தொடர்ந்து அந்நகரம் கடுமையான காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு, பொது சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் நகரத்தின் மிக மோசமான காற்று மாசுபாட்டு குறியீட்டை கடந்த ஞாயிற்றுக்கிழமை டில்லி பதிவு செய்தது. காற்றின் தரம், உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்த அளவை விட 50 மடங்கு நச்சுத் துகள்களின் செறிவை பதிவு செய்தது.
டில்லியின் அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் உள்ள விவசாயிகளின் நடவடிக்கையால் தான் இவ்வாறு நடந்துள்ளது என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவர்கள் தீ மூட்டுவதற்கு தடை சட்டங்கள் இருந்தபோதிலும், அதிகப்படியான பயிர்களை அழிக்க தங்கள் வயல்களுக்கு தீ வைத்து வருவதாகக் கூறப்படுகிறது.
தீயில் இருந்து வரும் தூசுகள் மற்றும் புகைகள் டில்லிக்கு பரவுகின்றன.
கடந்த திங்களன்று, பஞ்சாப் ஒரே நாளில் 5,953 பண்ணை தீயை பதிவு செய்துள்ளது. இதற்கிடையில், ஹரியானாவில் அதிகாரிகள் இந்த ஆண்டு இதுவரை 4,288 தீ சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.