Home One Line P1 பள்ளி நிகழ்ச்சிகளில் அரசியல் தலைவர்கள் கலந்து கொள்வது சாதாரணமான விவகாரம்!- மஸ்லீ மாலிக்

பள்ளி நிகழ்ச்சிகளில் அரசியல் தலைவர்கள் கலந்து கொள்வது சாதாரணமான விவகாரம்!- மஸ்லீ மாலிக்

644
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அரசுப் பள்ளிகளில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் அரசியல் தலைவர்கள் கலந்துகொள்வது பொதுவானது என்று கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் தெரிவித்துள்ளார்.

பெற்றோர் மற்றும் ஆசிரியர் சங்கம் உட்பட பள்ளியின் முறையான கோரிக்கைகள் இருப்பதாகவும் மஸ்லீ கூறினார்.

அமைச்சர்கள் வழக்கமாக உதவி கடிதத்தைப் பெறுவார்கள் என்று நான் நினைக்கிறேன். பெற்றோர் ஆசிரியர் சங்கத்திடமிருந்து நன்கொடைகளுக்காக கடிதங்கள் பெறப்படும். என் அலுவலகத்திற்கு வரும்போதெல்லாம், நான் தனிப்பட்ட முறையில் என் தொகுதிக்கு செல்கிறேன்.”

#TamilSchoolmychoice

உண்மையில், பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் விண்ணப்பங்கள் தஞ்சோங் பியாய் பள்ளிகள் மட்டும் அனுப்புவது அல்ல. நாடு முழுவதிலிருந்தும் பெறப்படுபவை.” என்று மஸ்லீ தெரிவித்தார்.

குகுப் லாவுட் சீனப் பள்ளியில், சாலாஹூடின் நடத்திய உரை குறித்து வினவிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவ்வுரையின் போது, அம்னோ மற்றும் பாஸ் அரசாங்கமாகிவிட்டால் நாடு குழப்பமாகிவிடும் என்று அவர் எச்சரித்தார்.

விமர்சிக்கப்பட்ட பின்னரும், சாலாஹூடின் தமது உரையை ஆதரித்துப் பேசி, பாஸ் மற்றும் அம்னோவும் இனவெறி உணர்வை நிறுத்த வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

இடைத்தேர்தலுக்கு முன்னர் உறுதியளித்ததாகக் கூறி அப்பள்ளிக்கு 5,000 ரிங்கிட் நன்கொடையை அவர் அளித்தார்.

கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி மாரடைப்பால் பெர்சாத்துவைச் சேர்ந்த டத்துக் டாக்டர் முகமட் பாரிட் முகமட் ராபிக் காலமானதைத் தொடர்ந்து தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.