Home One Line P1 பிபிசி ஹார்ட்டாக் கேள்வி பதில் நேரத்தில் ஜாகிர் நாயக், மதம் சார்ந்த கேள்விகளுக்கு தடுமாறிய முஜாஹிட்!

பிபிசி ஹார்ட்டாக் கேள்வி பதில் நேரத்தில் ஜாகிர் நாயக், மதம் சார்ந்த கேள்விகளுக்கு தடுமாறிய முஜாஹிட்!

949
0
SHARE
Ad
படம்: நன்றி பிபிசி இணையத்தளம்

கோலாலம்பூர்: பிபிசி ஹார்ட்டாக் (BBC Hardtalk) நிகழ்ச்சியின் கேள்வி பதில் நேரத்தில் பிரதமர் துறை அமைச்சர் முஜாஹிட் யூசோப் ராவா தர்மசங்கடமான சூழலை எதிர்கொண்டதாக மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.

இனம், மற்றும் மதம் சார்ந்த சரமாரியான கேள்விகளால் அவர் வாயடைத்துப்போனதாக அது குறிப்பிட்டுள்ளது.

நம்பிக்கைக் கூட்டணி நிர்வாகம் இஸ்லாத்தை ஒரு முற்போக்கான சக்தியாக ஆதரிப்பதாக தனது வாதத்தை முன்வைக்க முயன்ற நிலையில், நிகழ்ச்சி தொகுப்பாளரான சைனாப் பாடாவி ஜாகிர் நாயக் குறித்து எழுப்பிய கேள்வியால் முஜாஹிட் தடுமாறினார்.

#TamilSchoolmychoice

சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக்கைஉத்வேகம் தருபவர்என்று கடந்த மார்ச் மாதத்தில் தனது கருத்து குறித்து கேட்கபட்டதில் அவர் வாயடைத்துப் போனார். ​​

மேலும், சீ பீல்ட் கோயில் கலவரம் மற்றும் சர்ச்சைக்குரிய சமூக ஊடக இடுகைகள், சிறிய சியா சமூகத்தை வழிநடத்துவது மற்றும் சிஸ்டர்ஸ் அப் இஸ்லாம் அமைப்பின் சட்டபூர்வமான நிலைப்பாடு குறித்தும் முஜாஹிட்டுக்கான கடுமையான கேள்விகளாக அமைந்தன.

மலேசியாவில் மதமானது தேசிய ஒருங்கிணைப்புக்கு ஒரு பெரிய தடையாக இருக்கிறதா என்று கேட்கப்பட்டதற்கு, “தேசத்தின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு மதம் முக்கிய காரணியாக இருக்க வேண்டும்என்று முஜாஹிட் நிராகரித்துப் பேசினார்.

படம்: நன்றி பிபிசி இணையத்தளம்

பள்ளிகளில் பன்முகத்தன்மை இல்லாததால் மலேசிய இனங்களுக்கிடையிலான நட்பை வளர்ப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று கல்வியாளர் லீ ஹ்வோக் அவுனை மேற்கோள் காட்டி சைனாப் குறிப்பிட்டார்.

குறிப்பாக முஸ்லிம்களிடையே பிற மதங்களைப் பற்றிய அரசியல் கையாளுதல் மற்றும் அறிவின் ஆரோக்கியமற்ற பற்றாக்குறையை சைனாப் மேற்கோள் காட்டினார். இஸ்லாத்தின் முக்கியத்துவத்தை கூட்டாட்சி மதமாக முஜாஹிட் குறிப்பிட்டார், ஆனால் முந்தைய நிர்வாகம் மதத்தையும் இனத்தையும் தவறாகப் பயன்படுத்தியதாக அவர் குற்றம்சாட்டினார்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, ​​மதத்தையும் இனத்தையும் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தி சுரண்டும் ஓர் அரசாங்கமாக இருப்பதை நாங்கள் நிராகரித்தோம். அதனால்தான் நாங்கள் இப்போது இஸ்லாத்தை மிகவும் முற்போக்கான மதமாக முன்மொழிகிறோம் அல்லது ஆதரிக்கிறோம்.”

மலேசியாவில் இஸ்லாத்தைப் பற்றிய புதிய விவரிப்புடன் புதிய அரசாங்கத்துடன் வந்துள்ளோம். நாங்கள் இரக்கமுள்ள இஸ்லாம் என்று அழைக்கிறோம். தேசிய ஒற்றுமையைத் தூண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்என்று அவர் பதிலளித்தார். மேலும், இது புதிய நிர்வாகத்திற்கு மிகவும் சவாலானது என்றும் அவர் ஒப்புக் கொண்டார்.

எவ்வாறாயினும், ஜாகிர் பிரச்சனையில், குறிப்பாக மார்ச் 13-ஆம் தேதி அவரது முகநூல் பதிவில், முஜாஹிட் ஜாகிர் நாயக்கைப் பாராட்டி எழுதுவதற்கான நோக்கத்தை சைனாப் கேள்விக்குட்படுத்தினார்.

இதுபோன்ற சர்ச்சைக்குரிய நபரைஉத்வேகம் தருபவர்என்று ஏன் அழைக்கப்பட்டார் என்று கேட்டதற்கு, இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற சந்திப்பில் ஜாகிரை சர்ச்சைகளை ஏற்படுத்தும் உரைகள் குறித்து பலமுறை எச்சரித்ததாக முஜாஹிட் கூறினார்.

ஜாகிரின் அணுகுமுறை மலேசியாவில் பொருந்தாது என்றும் நான் பலமுறை கூறியுள்ளேன்.”

இந்த வார்த்தைகள் மற்றும் அறிக்கைகள் அனைத்தும் மலேசியாவில் பொருந்தாது. இதை நான் பலமுறை கூறியுள்ளேன். மலேசியாவில் அவரது நிலைப்பாடு குறித்தும் நான் அவரை எச்சரித்தேன். மலேசியா ஒரு பல்லின நாடு என்ற பொருளில் அவர் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.”

மலேசியாவில் அவர் என்ன செய்கிறாரோ அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று அர்த்தமல்ல, ஏனென்றால் நான் பாதுகாப்பதற்காக ஒரு தேசம் இருக்கிறது. அவரைப் பற்றிய எனது மற்ற அறிக்கைகளையும் நீங்கள் சரிபார்க்கலாம்,” என்று ஜாகிரின் கருத்துக்களில் இருந்து தன்னைத் தூர விலக்கி கருத்துரைத்தார்.