Home One Line P1 “தியான் சுவாவுக்கு பிரபாகரன் வழிவிட வேண்டுமா?” – டான்ஸ்ரீ குமரன் கண்டனம்

“தியான் சுவாவுக்கு பிரபாகரன் வழிவிட வேண்டுமா?” – டான்ஸ்ரீ குமரன் கண்டனம்

1307
0
SHARE
Ad

கோலாலம்பூர் – “தியான் சுவாவிற்கு வழிவிட்டு பிரபாகரன் பதவி விலக வேண்டும்” என்ற செய்தியை படித்துத் தான் அதிர்ச்சி அடைந்ததாக மஇகாவின் முன்னாள் தேசிய உதவித் தலைவரும், முன்னாள் துணை அமைச்சருமான டான்ஸ்ரீ  க.குமரன் இன்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், தற்போது நாட்டில் நிலவிவரும் அரசியல் நிலைமைகளைப் பார்க்கின்றபோது அரசியலில் இந்தியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுமோ என்ற அச்ச உணர்வை எற்படுத்துவதாகவும் இனவேறுபாடற்ற புதிய மலேசியாவை உருவாக்கும் பாட்டையில் பயணம் செய்கின்ற அரசியலில் கட்சி வேறுபாடின்றி இந்தியர்கள் ஓரங்கட்டுப்படுகிறார்களா என்ற சந்தேகம் ஏற்படுவதாகக் கூறினார்.

தியான் சுவா

பதினான்காவது நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற இந்தியர்களின் எண்ணிக்கை நாளடைவில் “அரசியல்” “இன” காரணங்களால் குறைந்து வருவது தொடர்கதையாகிவிடக்கூடாது.

#TamilSchoolmychoice

கேமரன் மலை தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ம.இ.கா வேட்பாளர் டத்தோ சிவராஜ் பதவியிழப்பு செய்யப்பட்டபோது, இடைத்தேர்தலில் போட்டியிட ம.இ.கா.விற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஆனால் ஜோகூர் தங்சோங் பியாய் நாடாளுமன்றத் தொகுதி காலியானபோது, அந்த தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்ற ம.சீ.ச. வேட்பாளருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பத்து நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் பிரபாகரன்

அடுத்தப் பிரதமராக் பொறுப்ப ஏற்க தன்னைத் தயார் செய்து கொள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற கருத்து வெளியானபோது, போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியில் பக்காத்தான் சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற கெஅடிலான் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் தன் கட்சித் தலைவருக்காக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக்கொடுத்தார்.

இன்று பத்து தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபாகரன், அத்தொகுதியின் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் தியான் சுவாவிற்காக பதவியை விட்டுக்கொடுக்கவேண்டும் என்று பதினான்கு அரசு சாரா இயங்கள் குரல் எழுப்பியுள்ளன.

நாடறிந்த சிறந்த அரசியல்வாதியான தியான் சுவாவின் சேவையை யாரும் மறுக்க முடியாது. அதேவேளையில் , கட்சிக்கும், நாட்டிற்கும் அவரது சேவை அவசரமாகத் தேவை என்றால், பதவியில் இருக்கும் ஒருவரை அதுவும் குறைந்த பிரதிநிதித்துவம் உள்ள இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை விலகச் சொல்வதைவிட, அவரை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக்கி அவருடைய சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ள ஆளுங் கட்சியினர் முற்சி செய்ய வேண்டும்மென்றும் தனது அறிக்கையில் டான்ஸ்ரீ குமரன் குறிப்பிட்டார்.