கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் சட்டத்தின் (பாபியா) கீழ் தண்டனை விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட பிகேஆர் உதவித் தலைவர் முகமட் ரபிசி ராம்லி எதிர்காலத்தில் தாம் அரசியல் களத்திற்கு திரும்ப விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் இப்போது தம் குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க இருப்பதாகவும், ஒரு சாதாரண குடிமகனாக இருக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.
“நான் இப்போது (அரசியலுக்கு திரும்புவதற்கு) ஆர்வம் காட்டவில்லை. அரசியல் துறையானது என்னிடமிருந்தும் எனது குடும்பத்தினரிடமிருந்தும் இவ்வளவு நேரத்தையும் சக்தியையும் எடுத்துக் கொண்டது.”
“நான் எந்த அரசாங்க பதவிக்கோ அல்லது பொது அலுவலகத்திலோ ஆர்வம் காட்டவில்லை என்று ஆரம்பத்தில் இருந்தே சொன்னேன். அடுத்த மூன்று, நான்கு ஆண்டுகளில், நான் ஒரு சாதாரண குடிமகனாக இருக்க விரும்புகிறேன் என்று நான் நினைக்கிறேன், ”என்று அவர் இன்று உயர்நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறினார்.
முன்னதாக, வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் சட்டத்தின் (பாபியா) கீழ் முகமட் ரபிசியை உயர்நீதிமன்றம் விடுவித்தது.