Home One Line P1 அடுத்த பொதுத் தேர்தலில் பத்து தொகுதியில் போட்டியிட தியான் சுவா உத்தேசம்!

அடுத்த பொதுத் தேர்தலில் பத்து தொகுதியில் போட்டியிட தியான் சுவா உத்தேசம்!

872
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வரவிருக்கும் பொதுத் தேர்தலில் பத்து நாடாளுமன்றத் தொகுதிக்கு போட்டியிட உத்தேசித்துள்ளதாக பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா தெளிவுப்படுத்தியுள்ளார்.

இந்நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரனை பதவி விலகுமாறு ஒருபோதும் தாம் கேட்டுக் கொண்டதில்லை என்று தியான் சுவா கூறினார்.

அவர் பதவி விலக வேண்டும் என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. நான் சொல்வது என்னவென்றால், வரும் தேர்தல்களில் நான் போட்டியிட முடியும், எனவே நான் எங்கு செல்ல வேண்டும் என்பதுதான் கேள்வி.”

#TamilSchoolmychoice

நடைமுறைக்குரியது பத்து தொகுதி மட்டுமே. ஆனால் கட்சிதான் அதனை முடிவு செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் நேற்று பிற்பகலில் தொடர்பு கொண்டபோது மலேசியாகினியிடம் கூறினார்.

தியான் சுவா கடந்த 2008 முதல் 2018 வரை இரண்டு தவணைகளுக்கு பத்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

இதனைத் தொடர்ந்து தியான் சுவாவிற்கு பதில் அளிக்கும் வகையில் பிரபாகரன் தமது முகநூலில் ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

தியான் சுவாவின் நடைமுறைக்கு ஏற்ப என்பது தமது பார்வையில் இருந்து  வேறுபட்டிருக்கலாம் என்று பிரபாகரன் கூறியுள்ளார்.

என்னைப் பொறுத்தவரை, என்னைப் போன்ற இளைஞர்கள் வாக்காளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவது மிகவும் நடைமுறைக்குரியது.”

பல ஆண்டுகளாக தீர்க்காத பிரச்சனைகளுடன், என்னை வாக்காளர்கள் அணுகுவதும், வாக்காளர்களை நான் அணுகுவதும் எனக்கு மிகவும் நடைமுறைக்குரியதாகத் தோன்றுகிறது.”

பத்துவில் உள்ள சிக்கல்களைப் புரிந்துகொள்வதும், இங்குள்ள உள்ளூர் வாசியாக மாற்றத்தைக் கொண்டுவருவதும் எனக்கு சாதகமாக உள்ளது.என்று பிரபாகரன் கூறினார்.