Home One Line P1 தேர்தல் ஆணையம்: கிமானிஸ் இடைத்தேர்தல் ஏற்பாடு குறித்த சந்திப்புக் கூட்டம் டிசம்பர் 16 நடைபெறும்!

தேர்தல் ஆணையம்: கிமானிஸ் இடைத்தேர்தல் ஏற்பாடு குறித்த சந்திப்புக் கூட்டம் டிசம்பர் 16 நடைபெறும்!

734
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கிமானிஸ் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கான தேதிகள் குறித்து விவாதிக்க தேர்தல் ஆணையம் வருகிற திங்கட்கிழமை சிறப்புக் கூட்டத்தை நடத்த உள்ளதாக அதன் செயலாளர் டத்தோ முகமட் எலியாஸ் அபுபாக்கர் கூறினார்.

அக்கூட்டத்தை தேர்தல் ஆணையத் தலைவர் டத்தோ அசார் அசிசான் ஹாருன் காலை 10 மணிக்கு இங்குள்ள தேர்தல் ஆணைய தலைமையகத்தில் தலைமையேற்பார் என்று அவர் கூறினார்.

தேர்தல் ஆணை வெளியிடும் தேதி, நியமன நாள், வாக்குப்பதிவு நாள் மற்றும் தேர்தலில் பயன்படுத்தப்பட வேண்டிய வாக்காளர் பட்டியல், மற்றும் தேவையான பிற ஏற்பாடுகள் போன்ற இடைத்தேர்தலுக்கான முக்கியமான தேதிகள் குறித்தும் அக்கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த ஆண்டு மே மாதம் 14-வது பொதுத் தேர்தலின் போது கிமானிஸ் நாடாளுமன்றத் தொகுதியில் டத்தோஶ்ரீ அனிபா அமானின் வெற்றியை இரத்து செய்த கோத்தா கினபாலு தேர்தல் நீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய நீதிமன்றம் சமீபத்தில் உறுதி செய்ததை அடுத்து அத்தொகுதியில் தேர்தல் நடக்க உள்ளது.

முன்னதாக, அத்தொகுதியில் வாரிசான் கட்சி போட்டியிடும் என்று நம்பிக்கைக் கூட்டணி முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.