Home One Line P2 ஈரானின் 52 மையங்களைத் தாக்குவோம் – டிரம்ப் எச்சரிக்கை

ஈரானின் 52 மையங்களைத் தாக்குவோம் – டிரம்ப் எச்சரிக்கை

726
0
SHARE
Ad

வாஷிங்டன் – ஈராக்கில் அமெரிக்க வான்படை மேற்கொண்டத் தாக்குதலில், ஈரானின் முக்கியமான இராணுவ தளபதியான காசிம் சொலைமணி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு பதிலடி கொடுப்போம் என ஈரான் எச்சரித்திருந்தது.

அந்த எச்சரிக்கைக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து பதில் எச்சரிக்கைகளை விடுத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

“நீங்கள் தாக்குதல் நடத்தினீர்கள், நாங்களும் பதில் தாக்குதல் நடத்தினோம். மேலும் அமெரிக்க இலக்குகளைத் தாக்க முற்பட்டால், பதில் தாக்குதல் நடத்த ஈரானின் 52 மையங்களை நாங்கள் அடையாளம் கண்டிருக்கிறோம். எங்களின் பதிலடி விரைவானதாகவும், கடுமையானதாகவும் இருக்கும்” என டிரம்ப் எச்சரித்தார்.

#TamilSchoolmychoice

அமெரிக்கா இப்போதுதான் 2 டிரில்லியன் டாலர்களை இராணுவ விரிவாக்கத்திற்காக செலவழித்ததாகவும், அந்த விரிவாக்கத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற சில நவீன ஆயுதங்கள் உங்களை நோக்கிப் பாயும் என்றும் டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்தியக் கிழக்கில் ஈரானின் அதிகாரத்தை விரிவுபடுத்த முக்கியப்பங்கினை வகித்த சொலைமணி, டிரம்பால் அங்கீகரிக்கப்பட்ட பாக்தாத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இதற்கிடையில், கொல்லப்பட்ட சொலைமணியின் இறுதி ஊர்வலத்திற்கு முன்னர் அமெரிக்கா நடத்திய மற்றொரு தாக்குதலில் மேலும் ஐவர் கொல்லப்பட்டிருப்பது இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.