கொழும்பு -கடந்த 3 நாட்களாக இலங்கைக்கு வருகை மேற்கொண்டிருந்த மஇகா தேசியத் தலைவரும், மலேசிய நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் அங்கு, பல அரசாங்கத் தலைவர்களுடன் சந்திப்பு நடத்தி இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவு வலுப்பட கலந்துரையாடல்கள் நடத்தினார்.
விக்னேஸ்வரனுடன் மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன், மஇகா கெடா மாநிலத் தொடர்புக் குழுத் தலைவர் செனட்டர் ஆனந்தன், முன்னாள் மஇகா மகளிர் தலைவி கோமளா கிருஷ்ணமூர்த்தி, எம்ஐஇடி தலைமைச் செயல் அதிகாரி மும்தாஜ் ஆகியோரும் இந்தப் பயணத்தில் இடம் பெற்றிருந்தனர்.
விக்னேஸ்வரன் இன்று வியாழக்கிழமை (பிப்ரவரி 13) நாடு திரும்பினார்.
இலங்கை மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சரும், சமூகப் பாதுகாப்பு சுகாதார மற்றும் மருத்துவ சேவைகளுக்கான அமைச்சருமான பவித்ரா தேவி வன்னியராச்சியைச் சந்தித்து உரையாடிய விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவினர், தகவல், பொது ஊடகத் துறை மற்றும் உயர்கல்வி, தொழில்நுட்பம், புத்தாக்கத்துக்கான அமைச்சர் பண்டுலா குணவர்த்தனாவையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நீதித்துறை, மனித உரிமை மற்றும் சட்ட சீர்திருத்தங்களுக்கான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவையும் விக்னேஸ்வரன் குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடினர்.
அந்த சந்திப்புகளின்போது எடுக்கப்பட்ட படக் காட்சிகளை இங்கே காணலாம்:

