Home One Line P1 முழுத் தவணைக்கும் மகாதீர் : கையெழுத்திட்ட பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார்?

முழுத் தவணைக்கும் மகாதீர் : கையெழுத்திட்ட பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார்?

1013
0
SHARE
Ad

கோலாலம்பூர் – துன் மகாதீரே முழுத் தவணைக்கும் பிரதமராக நீடிக்க வேண்டும் என்ற சதித் திட்டம் தீட்டப்பட்டு, அதற்காக பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துகள் பெறப்பட்டன என்று அன்வார் இப்ராகிம் உறுதிப்படுத்தியிருக்கும் நிலையில், சத்தியப் பிரமாணத்தில் கையெழுத்திட்டதாக  பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறார்.

நேற்று வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய அன்வார் இதுவரையில் பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இது குறித்து மறுத்திருக்கின்றனர் என்றும் கூறினார்.

மொத்தமுள்ள 222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 50 உறுப்பினர்களை பிகேஆர் கொண்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

கடந்த வியாழக்கிழமை (பிப்ரவரி 13) துன் மகாதீரை அவரது அலுவலகத்தில் அன்வார் இப்ராகிம் சந்தித்தார். அந்த சந்திப்பைத் தொடர்ந்து அன்வார் விடுத்த அறிக்கையில், பிப்ரவரி 21-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நம்பிக்கைக் கூட்டணியின் தலைமைத்துவ மன்றக் கூட்டத்தில் மகாதீருக்கும் தனக்கும் இடையிலான பதவிப் பரிமாற்றம் குறித்த முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

தனக்கு ஆதரவாக நடைபெறும் கையெழுத்து வேட்டையில் தான்  சம்பந்தப்படவில்லை என்பதையும் பின்னர் வேறொரு பத்திரிகையாளர் சந்திப்பில் மகாதீர் உறுதிப்படுத்தினார். ஆசிய, பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு (ஏபெக்) கோலாலம்பூரில் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் நிலையில் அதற்குப் பின்னர் தான் பதவி விலகுவது உறுதி எனவும் மகாதீர்  தெரிவித்தார்.