Home One Line P1 சரவணன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சாமிவேலு, விக்னேஸ்வரன்!

சரவணன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சாமிவேலு, விக்னேஸ்வரன்!

1654
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணனின் 52-வது பிறந்த நாள் கொண்டாட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 16) அவரது இல்லத்தில் நடைபெற்றது.

சரவணனின் பிறந்த நாளான பிப்ரவரி 4-ஆம் தேதியன்று அவர் வெளிநாட்டில் இருந்த காரணத்தால் தனது பிறந்த நாளை அவர் இன்று தனது ஆதரவாளர்கள், மஇகா தலைவர்களுடன் எளிமையான முறையில் கொண்டாடினார்.

முன்னாள் மஇகா தேசியத் தலைவர் துன் ச.சாமிவேலு, மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா, மஇகாவின் முன்னாள் தலைமைச் செயலாளர் டி.பி.விஜேந்திரன், மஇகா பேராக் மாநிலத்தின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ ராஜூ, மஇகா நிர்வாகச் செயலாளர் இராமலிங்கம், முன்னாள் துணையமைச்சர் டத்தோ ப.கமலநாதன் என பல சமூக, மஇகா பிரமுகர்கள் சரவணனின் பிறந்த நாள் வைபவத்தில் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

சரவணனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட படக் காட்சிகளை இங்கே காணலாம்: