Home One Line P1 பாஸ், அம்னோ மொகிதினுக்கு ஆதரவாக சத்தியப்பிரமாணமா, அம்னோ மறுப்பு!

பாஸ், அம்னோ மொகிதினுக்கு ஆதரவாக சத்தியப்பிரமாணமா, அம்னோ மறுப்பு!

509
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் பதவி வேட்பாளராக, டான்ஸ்ரீ மொகிதின் யாசினை, அம்னோ மற்றும் பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்து கையெழுத்திட்டுள்ளதாக டத்தோ துவான் இப்ராகிம் துவான் மான் கூறியதை அம்னோ மறுத்துள்ளது.

பாஸ் கட்சி, அம்னோவுடன் சேர்ந்து, துன் டாக்டர் மகாதீர் முகமட்டை பிரதமராக ஆதரிப்பதற்காக ஒரு சத்தியப்பிரமாணத்தில் ஆரம்பத்தில் கையெழுத்திட்டது என்று துவான் இப்ராகிம் தெரிவித்ததாக டி ஸ்டார் பதிவிட்டுள்ளது.

“டாக்டர் மகாதீர் தனது பதவி விலகலை அறிவித்து, பதவிகளை ஏற்க மறுத்தபோது, முவாபாக்காட் நேஷனல் மொகிதினுக்காக ஒரு சத்தியப்பிரமாணத்தைக் கையெழுத்திட்டது.” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“ஆனால் தெளிவான (நாடாளுமன்ற) பெரும்பான்மை இல்லாவிட்டால், நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் முன்மொழிகிறோம்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், மொகிதின் யாசினை பிரதமர் வேட்பாளராக நியமிக்க அம்னோவும், பாஸ் கட்சியும் ஒப்புக் கொண்டதாக டி ஸ்டார் வெளியிட்ட அறிக்கையை அம்னோ பொதுச்செயலாளர் அன்வார் மூசா மறுத்துள்ளார்.

“இது உண்மை இல்லை, நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்பதே எங்கள் நிலைப்பாடு.” என்று அவர் தனது டுவீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அம்னோவின் நிலைப்பாடு தொடர்பான அறிக்கைகளை தலைவர் அகமட் சாஹிட் ஹமீடியே முடிவு செய்ய முடியும் என்று அன்வார் கூறினார்.