Home One Line P1 மஇகா கெடா மாநிலத்தின் நல்லெண்ண விருந்து

மஇகா கெடா மாநிலத்தின் நல்லெண்ண விருந்து

1011
0
SHARE
Ad

சுங்கைப்பட்டாணி – மஇகா கெடா மாநிலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மார்ச் 1-ஆம் தேதி சுங்கைப்பட்டாணியில் உள்ள காந்தி மண்டபத்தில் சிறப்பு நல்லெண்ண விருந்து ஒன்றை நடத்தியது.

முன்கூட்டியே திட்டமிடப் பட்ட நிகழ்ச்சி என்றாலும், அன்றைய தினம் காலையில் புதிய பிரதமராக டான்ஸ்ரீ மொகிதின் யாசின் பதவி ஏற்றுக் கொண்டதும், அதைத் தொடர்ந்து அவர் அமைக்கவிருக்கும் புதிய அமைச்சரவையில் மஇகாவும் இடம் பெறும் என்ற தகவல்கள் வெளியாகத் தொடங்கியதும், மஇகா கெடா மாநிலத்தின் நல்லெண்ண விருந்திற்கு கூடுதல் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் சேர்த்தது.

மஇகா கெடா மாநிலத் தொடர்புக் குழுத் தலைவர் டத்தோ டாக்டர் எஸ்.ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நல்லெண்ண விருந்தில் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

அந்த நிகழ்ச்சியில் மற்ற தேசிய முன்னணி உறுப்பியக் கட்சித் தலைவர்களும், பாஸ் தலைவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மஇகா கெடா மாநில நல்லெண்ண விருந்து நிகழ்ச்சியின் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்: