ஈப்போ – நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைகளால் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாமல் இருக்கும் நிலையில் மாணவர்களும் ஆசிரியர்களும் ஒருசேர இல்லங்களில் இருந்தபடியே தங்களின் அறிவாற்றலையும், கல்வித் திறனையும் வளர்த்துக் கொள்ள பல்வேறு முயற்சிகள் அரசாங்க நிலையிலும், தனியார் நிலையிலும் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்த வகையில் நாளை வெள்ளிக்கிழமை (மே 15) பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.00 மணிவரை பேராக் மாநில தமிழ்ப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் WEBINAR / இயங்கலைப் பயில்களம் #6 : நிகழ்ச்சியில் மலேசியாவின் பிரபல கணினி நிபுணர் முத்து நெடுமாறன் கலந்துகொள்கிறார்.
முரசு சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தோற்றுநரும், தலைமைச் செயல்முறை அதிகாரியுமான முத்து நெடுமாறன் செல்லினம் குறுஞ்செயலியைத் தோற்றுவித்தவருமாவார். முரசு அஞ்சல் தமிழ் எழுத்துருவின் உருவாக்குநருமான முத்து நெடுமாறன் செல்லியல் இணைய ஊடகத்தின் தோற்றுநரும் ஆவார்.
செல்லினம் பயன்பாடு, சொல்வளம் விளையாட்டு ஆகிய தலைப்புகளின் அடிப்படையில் இந்த பயில்களம் அமைந்திருக்கும்.
பேராக் மாநிலத் தலைமையாசிரியர் கழக ஆதரவுடன், பேராக் மாநில தமிழ்ப் பள்ளிகளுக்கான உதவி இயக்குநர் சுப.சற்குணன் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியை யூடியூப் தளத்தில் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம் :
https://tiny.cc/webinarstpk
இந்த நிகழ்ச்சியை முகநூல் வழி கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: