Home வணிகம்/தொழில் நுட்பம் மீண்டும் புதுடில்லி-மும்பைக்கு ஏர்-ஆசியா சேவை ஆரம்பம்-டோனி பெர்னாண்டஸ் அறிவிப்பு.

மீண்டும் புதுடில்லி-மும்பைக்கு ஏர்-ஆசியா சேவை ஆரம்பம்-டோனி பெர்னாண்டஸ் அறிவிப்பு.

762
0
SHARE
Ad

airasia-tony-fernandesபுதுடில்லி, ஏப்ரல் 12 –   கோலாலம்பூரில் இருந்து ஏர்-ஆசியா தனது மும்பை மற்றும் புதுடில்லிக்கான வழித்தடங்களை மீண்டும் துவங்கும் என அதன் முதன்மை நிர்வாக அதிகாரி டான்ஸ்ரீ  டோனி பெர்னாண்டஸ் தமது முகநூலில் (பேஸ் புக்) தெரிவித்திருக்கிறார்.

மலிவு விலை விமான சேவை நிறுவனமான ஏர்-ஆசியா கடந்த வருடம் ஜனவரியில் தான்  2010 இல் ஆரம்பித்திருந்த தனது மும்பை மற்றும் புதுடில்லிக்கான விமானச் சேவையை நிறுத்திவைத்திருந்தது.

இப்போது மீண்டும் இந்த மார்க்கங்களில் விமானச் சேவை தொடங்கவிருப்பதால், வர்த்தக நோக்கத்திற்காக அடிக்கடி கோலாலம்பூரிலிருந்து இந்த நகர்களுக்கு பயணிப்பவர்கள் பயனடைவார்கள் என்பது திண்ணம். அதே போன்று பம்பாய், டில்லி நகர்களிலிருந்தும் அதன் சுற்று வட்டாரங்களில் இருந்தும் மலேசியாவுக்கு நேரடியாக வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கையும் இதனால் உயரும்.

#TamilSchoolmychoice

இந்திய உள்நாட்டு விமான விதிகளின்படி புதிய விமான நிறுவனங்கள் தங்களின் முதல் ஐந்தாண்டுகளில் பன்னாட்டு மார்க்கங்களில் பறக்க அனுமதிப்பதில்லை, ஆனால் ஏர்-ஆசியாவின் இவ்விரு வழித்தடங்களுக்கான பயணச்சேவை அனுமதி அதன் முயற்சிகளுக்கு ஊன்றுகோலாக அமைந்துள்ளது.

இவ்வருட இறுதியில்  சேவையைத்  தொடங்கவிருக்கும் புதிய ஏர் ஆசியா இந்தியா  நிறுவனம் சென்னையை தமது தலைமையகமாகக் கொண்டு, இரண்டாம் மூன்றாம் நிலை நகரங்களுக்குச் செல்லும்.

பட்ஜெட் விமான சேவை நிறுவனமான ஏர்-ஆசியாவின் இந்த சேவையால் கோலாலம்பூரில் இருந்து பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை நிச்சயம் அதிகமாகும்.