Home One Line P1 94 வயதிலும் குதிரையோட்டும் எலிசபெத் மகாராணி! அன்றும் இன்றும்!

94 வயதிலும் குதிரையோட்டும் எலிசபெத் மகாராணி! அன்றும் இன்றும்!

947
0
SHARE
Ad

இலண்டன் : உலகிலேயே வயதால் மூத்த ஆட்சியாளராக மட்டுமில்லாமல், நீண்ட காலமாகவும் ஆட்சி செய்துவருபவர் எலிசபெத் மகாராணி. பிரிட்டனின் அரச வம்ச வரலாற்றில் நீண்ட காலமாக ஆட்சியில் இருப்பவரும் இவர்தான்.

94 வயதாகி விட்ட நிலையில் இன்னும் திடகாத்திரமாக உலா வருகிறார் எலிசபெத் ராணியார். இப்போதும் அவர் குதிரையோட்டத்தில் ஈடுபட்டிருக்கும் புகைப்படங்கள் பக்கிங்ஹாம் அரண்மனையால் வெளியிடப்பட்டிருக்கின்றன.

இளம் வயது முதலே பந்தயக் குதிரைகள் வளர்ப்பில் ஆர்வம் காட்டி வந்திருப்பவர் எலிசபெத். சிறந்த பந்தயக் குதிரைகளைக் கொண்டு இனவிருத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டிருப்பவர். அவரது நெருங்கிய நண்பர்களில் பலர் குதிரை வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்கள், குதிரைப் பந்தயத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் என எப்போதுமே கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

இன்றைக்கு 94 வயதில் குதிரை ஓட்டும் எலிசபெத் ராணியார் இளம் வயதிலும் இதே போன்று குதிரை ஓட்டத்தில் ஈடுபட்டிருக்கும் புகைப்படங்களையும் பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டிருக்கிறது.

ஆனால், உலக அளவில் 94-வது வயதில் குதிரை ஓட்டத்தில் ஈடுபடுவதில் ராணியாருக்கு இன்னொரு போட்டியாளர் இருக்கிறார். அதுவும் நமது நாட்டிலேயே இருக்கிறார்.

நமது முன்னாள் பிரதமர் துன் மகாதீர்தான் அவர்!

மகாதீருக்கும் 94 வயதுதான். அவரும் இதே போன்று இப்போதும் குதிரை ஓட்டத்தில் ஈடுபடுகிறார்.

94-வது வயதில் துன் மகாதீரின் குதிரையோட்டம்
இளம் வயதில் குதிரையோட்டத்தில் ஈடுபட்ட எலிசபெத் ராணியார்