Home One Line P1 வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தும் முன் கொவிட்19 பரிசோதனை ஆவணங்களை சரிபார்க்கவும்

வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தும் முன் கொவிட்19 பரிசோதனை ஆவணங்களை சரிபார்க்கவும்

655
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த விரும்பும் முதலாளிகள் சுகாதார அலுவலகத்தால் சமர்ப்பிக்கப்பட்ட கொவிட்19 பரிசோதனை ஆவணங்களின் நம்பகத்தன்மையை மதிப்பாய்வு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வெளிநாட்டினரின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் காரணமாக அவர்களின் சுகாதார ஆவணங்களை பொய்யுரைப்பதால் புதிய தொற்றுக் குழுக்கள் உருவாவதை தவிர்ப்பது முக்கியம் என்று புக்கிட் அமான் வணிக குற்றவியல் புலனாய்வுத் துறைத் துணை இயக்குநர், டத்தோ சைபுல் அஸ்லி கமாருடின் கூறினார்.

“அவர்கள் (முதலாளிகள்) சுகாதார அலுவலகத்துடன் விவரங்களைப் பெற வேண்டும். சுகாதார அறிக்கையின் விவரங்களும் வருங்கால ஊழியரின் பெயரும் செல்லுபடியாகும், சுகாதார பதிவில் உள்ளதைப் போலவே இருப்பதை உறுதி செய்ய வேண்டும். புதிய தொற்றுக் குழுக்கள் தோன்றுவதைத் தடுக்க வேண்டும். ” என்று அவர் இன்று பெர்னாமாவிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

கொவிட் கொவிட்19 பரிசோதனை ஆவணங்களை வெளிநாட்டினருக்கு வழங்கிய கும்பல் வழக்கு குறித்து கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார்.

கொவிட்19 சுகாதார பரிசோதனைகள் பற்றிய நான்கு அறிக்கைகளை சைபுல் அஸ்லி பெற்றுள்ளார். இந்த ஆவணங்கள் ஒவ்வொன்றும் 50 ரிங்கிட்டிற்கு வெளிநாட்டவர்களுக்கு விற்கப்படுகின்றன என்று புகார் எழுந்துள்ளன.

இந்த நடவடிக்கைகளைத் தடுக்க புக்கிட் அமான் கோலாலம்பூர் காவல் துறையுடன் வழக்கமான கண்காணிப்பு மற்றும் விசாரணைகளை மேற்கொள்வர் என்றும் அவர் கூறினார்.

கொவிட்19 பரிசோதனை முடிவுகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 26 முதல் 30 வயதுடைய மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களாக பணிபுரியும் ஏழு வங்காளதேச ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.