Home அரசியல் நான் பதவி விலகவில்லை – பாஸ் கட்சியின் ஹருண் டின் விளக்கம்

நான் பதவி விலகவில்லை – பாஸ் கட்சியின் ஹருண் டின் விளக்கம்

615
0
SHARE
Ad

Harun-Din-Pas-Sliderகங்சார், ஏப்ரல் 13- பாஸ் கட்சியின் ஆன்மீகத்  துணைத்தலைவர் டத்தோ டாக்டர் ஹருண் டின் பதவி விலகியதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து அச்செய்திக்கு பதிலளித்த ஹருண் டின் தான் பதவி விலகவில்லை என்றும், அது வெறும் வதந்தி என்றும் தெரிவித்தார்.

வரும் பொதுத்தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இது போன்ற வதந்திகள் வெளிவருவதாகவும் அவர் கூறினார்.

ஆதலால் இது போன்ற வதந்திகளை நம்பி மக்கள் குழப்பமடைய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் பெர்லிஸ் மாநிலத்தைச் சேர்ந்தவரான ஹருண் டின் அந்த மாநிலத்திலுள்ள ஒரு நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.