Home One Line P1 வாரிசான் கட்சியிலிருந்து 1,000 உறுப்பினர்கள் வெளியேறினர்

வாரிசான் கட்சியிலிருந்து 1,000 உறுப்பினர்கள் வெளியேறினர்

396
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: 14- வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கிளையை புறக்கணித்ததாகக் கூறி கட்சியின் தலைவருக்கு எதிரான அதிருப்தி தொடர்பாக 11 கிளைத் தலைவர்கள் உட்பட வாரிசான் கட்சியின் 1,000- க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கட்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளனர்.

ஏர்போர்ட் மற்றும் சிபுகால் வாக்குப்பதிவு மையம் ஆகியவற்றின் கீழ் உள்ள அனைத்து கட்சி கிளைகளையும் உள்ளடக்கியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது செஜாதி 1 கிளைத் தலைவர் இப்ராகிம் யூசோப் தலையில் நடைபெற்றது.

“கடந்த 14-வது பொதுத் தேர்தலில் வாரிசானை வெற்றியடையச் செய்ய நாங்கள் கடுமையாக உழைத்தோம், ஆனால் எங்களுக்கு வெகுமதி கிடைக்கவில்லை.

#TamilSchoolmychoice

“எடுத்துக்காட்டாக, 14-வது பொதுத் தேர்தலுக்கு முன்னர் பதிவு படிவத்தை சமர்ப்பித்த போதிலும், எங்கள் கிளை சங்கப் பதிவகத்தால் பதிவு செய்யப்படவில்லை.” என்று அவர் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

11 கட்சி கிளைகள் வெளியேறுவது குறித்த அறிவிப்புக்கு, கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் எவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அது அவர்களின் தனிப்பட்ட முடிவு என்றும் இப்ராகிம் கூறினார்.

கட்சியின் உறுப்பினர்கள் சுயேச்சையாக இருக்க விரும்புவதாக அவர் கூறினார். அதே நேரத்தில் தாம் சபா மக்கள் ஒற்றுமைக் கட்சி என்ற சபா உள்ளூர் கட்சியில் சேர முடிவு செய்துள்ளதாக இப்ராகிம் கூறினார்.