Home One Line P1 பணமோசடி குற்றச்சாட்டுகளிலிருந்து அம்னோ சட்ட ஆலோசகர் தற்காலிக விடுவிப்பு

பணமோசடி குற்றச்சாட்டுகளிலிருந்து அம்னோ சட்ட ஆலோசகர் தற்காலிக விடுவிப்பு

439
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோ சட்ட ஆலோசகர் முகமட் ஹபாரிசாம் ஹருண் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதை அடுத்து, இன்று திங்கட்கிழமை மீண்டும் அவர் புதிய குற்றச்சாட்டுகளை அமர்வு நீதிமன்றத்தில் எதிர்கொள்வார்.

15 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட பணமோசடி குற்றச்சாட்டுகளிலிருந்து அவர் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளார்.

விடுவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில், வழக்கறிஞர் ஹபாரிசாம் ஹருண் இங்கே அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார். மூன்று மோசடி குற்றச்சாட்டுகளின் பேரில், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிடமிருந்து 15 மில்லியன் பெறப்பட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

#TamilSchoolmychoice

நீதிபதி அஸ்மான் அகமட் முன்னிலையில் அவர் தமக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளும் தனித்தனியாக வாசிக்கப்பட்ட பின்னர், மறுத்தார்.

முதல் குற்றச்சாட்டின் படி, 48 வயதான முகமட் ஹபாரிசாம், பணமோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அதாவது 7.5 மில்லியன் ரிங்கிட் தொகையைப் பெற்றது. இது 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதியிட்ட நஜிப்பின் வங்கி காசோலை மூலம் பெற்றார். இது அவரது முன்னாள் சட்ட நிறுவனமான ஹபாரிசாம் வான் & ஆயிஷா முபாரக் பெயரில் செலுத்தப்பட்டது.

பணமோசடி தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நிதி மற்றும் சட்டவிரோத செயல்களின் சட்டம் 2001- இன் பிரிவு கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 5 மில்லியன் வரை அபராதமும் விதிக்கிறது.

இரண்டாவது மற்றும் மூன்றாவது குற்றச்சாட்டுகளுக்கு, முகமட் ஹபாரிசாம் 4 மில்லியன் மற்றும் 3.5 மில்லியன் ரிங்கிட் தொகையைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. 2014-ஆம் ஆண்டு நவம்பர் 7, 2015-ஆம் ஆண்டு ஜனவரி 21 தேதியிட்ட நஜிப்பின் இரண்டு வங்கி காசோலைகள் மூலம் சட்ட நிறுவனத்தின் கணக்கில் இந்த தொகைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

அதேச் சட்டத்தின் பிரிவு 4 (1) (பி)- இன் கீழ், அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், செயல்பாட்டின் மூலம் கிடைக்கும் வருமானத்தின் ஐந்து மடங்கு குறையாத அபராதமும் விதிக்கப்படுகிறது.

ஹபாரிசாம் ஒரு உத்தரவாதத்துடன் 200,000 ரிங்கிட் பிணையில் விடுவிக்கப்பட்டார். வழக்கு மீண்டும் செப்டம்பர் 9-ஆம் தேதி செவிமெடுக்கப்படும்.