Home One Line P2 பாகுபலி புகழ் ராணா டகுபதி திருமணம் நடந்தேறியது

பாகுபலி புகழ் ராணா டகுபதி திருமணம் நடந்தேறியது

842
0
SHARE
Ad

ஐதராபாத் – இரண்டு பாகங்களாக, பல மொழிகளில் வெளிவந்து வசூலிலும் தரத்திலும் உலகப்புகழ் பெற்ற படம் பாகுபலி.

இந்தப் படத்தில் கொடூரமான வில்லன் பல்வால் தேவன் பாத்திரத்தில் நடித்து இரசிகர்களை கவர்ந்தவர் ராணா டகுபதி.

ஆஜானுபாகுவான உடலமைப்பும் அழகான தோற்றமும் கொண்டவர் என்றாலும் கடந்த பல ஆண்டுகளாக பல நடிகைகளுடன் தொடர்புப் படுத்தி கிசுகிசுக்கள் எழுந்தாலும் அவருக்குத் திருமணம் தள்ளிக் கொண்டே போனது.

#TamilSchoolmychoice

இறுதியில் மிஹிகா பஜாஜ் என்ற ஆடையலங்கார வடிவமைப்பாளரான பெண்மணியைக் காதலித்து அவருடன் திருமண நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.

திருமண வைபவத்தின் போது புதுமாப்பிள்ளை ராணா டகுபதி (நடுவில்), அவரது தந்தையார் சுரேஷ் (இடது), ராணாவின் நெருங்கிய உறவினரும் நடிகருமான வெங்கடேஷ் (வலது)

அதைத் தொடர்ந்து நேற்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) ஐதராபாத் நகரில் உள்ள ராமாநாயுடு திரைப்பட அரங்கில் (ஸ்டுடியோ) அவர்களின் திருமணம் நடைபெற்றது.

கொவிட்-19 பிரச்சனை காரணமாக மிக நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

திருமணத்தில் கலந்து கொண்டவர்களில் நடிகர் நாக சைதன்யா அவரது மனைவி நடிகை சமந்தா ஆகியோரும் அடங்குவர்.

தெலுங்கு மற்றும் மார்வாரி இன பாரம்பரிய சடங்குகளின் முறைப்படி அவர்களின் திருமணம் நடந்தேறியது.

அந்த திருமண நிகழ்ச்சி நேரலையாக இணையம் வழியாகவும் மணமக்களின் நெருங்கிய நண்பர்கள் உறவினர்களுக்கு ஒளிபரப்பப்பட்டது.

பொதுமக்கள் பார்க்கும் வகையிலும் சில நிமிடங்கள் அந்தத் திருமணக் காட்சிகள் நேரலையாக ஒளிபரப்பப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன.

திருமணத்தைத் தொடர்ந்து  ராணா டகுபதிக்கு திரை உலகப் பிரமுகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்தி நடிகர் அக்சய்குமார் “உலகம் முழுவதும் நடமாட்டக் கட்டுப்பாடு அமுலில் இருக்கும் இவ்வேளையில் கல்யாண கட்டுப்பாட்டுக்குள் நுழைவதற்கு இது பொருத்தமான நேரம்” என்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

சமூக ஊடகங்களிலும் தென்னிந்திய நடிகைகள் குஷ்பு, கமல்ஹாசனின் மகள் சுருதி ஹாசன், காஜல் அகர்வால் ஆகியோர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.