பாலசுப்பிரமணியம் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் கொவிட்-19 தொற்றுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
தனது தந்தை தற்போது மயக்க நிலையில் இருந்து 90 விழுக்காடு மீண்டு விட்டதாகவும் வழங்கப்படும் சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு தருவதாகவும் சரண் மேலும் தெரிவித்தார்.
உலகெங்கிலும் உள்ள இரசிகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குணமடைய தொடர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் தனது தந்தையின் உடல்நிலைக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் சரண் அண்மையில் காணொளி வழி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
Comments