Home One Line P2 இந்தியா-சீனா எல்லையில் பதட்டம் – இருநாட்டு தற்காப்பு அமைச்சர்கள் சந்திப்பு

இந்தியா-சீனா எல்லையில் பதட்டம் – இருநாட்டு தற்காப்பு அமைச்சர்கள் சந்திப்பு

767
0
SHARE
Ad
ராஜ்நாத் சிங்

புதுடில்லி : கடந்த சில மாதங்களாக சீனா-இந்திய எல்லையில் நீடித்து வரும் பதட்டம் தற்போது அதிகரித்து வருகிறது. லடாக்கில் லே வட்டாரத்திற்கு வருகை தந்த இந்திய இராணுவத தளபதி மனோஜ் முகுந்த் நரவானே அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும், முன்னேற்பாடுகளையும் பார்வையிட்டார்.

சீனாவின் பகுதியில் இராணுவத் தளவாடங்கள் குவிக்கப்படுகிறது என புகார்கள் எழுந்திருக்கின்றன. இந்தியாவும் இராணுவத்தை எல்லைப் பகுதியில் குவித்து வருகிறது என சீனா குற்றம் சாட்டுகிறது.

எல்லைப் பகுதியில் நிலைமையைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மனோஜ் முகுந்த் சீனாவுடன் தூதரக ரீதியிலும் இராணுவ ரீதியிலும் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“கருத்து வேறுபாடுகள் பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்க்கப்படும். எதிர்காலத்திலும் பேச்சு வார்த்தைகள் தொடரும்” என மனோஜ் முகுந்த் கூறினார்.

கடந்த ஆகஸ்ட் 29-30 ஆகிய தேதிகளில் இந்தியப் பகுதிக்குள் சீன இராணுவம் நுழைய முயற்சி செய்தது என்றும் சீன ராணுவத்தினரின் அந்த முயற்சியை இந்திய ராணுவம் தடுத்தது என்றும் இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில் இரஷியத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெறும் மாநாடு ஒன்றுக்கு வருகை தந்திருக்கிறார் இந்தியத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங். அதே மாநாட்டுக்கு சீனத் தற்காப்பு அமைச்சரும் வருகை தந்திருக்கிறார்.

இவர்கள் இருவருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (வெள்ளிக்கிழமை செப்டம்பர் 4) இரவு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.