Home One Line P1 எம்ஏசிசி: நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய அம்னோ தொகுதி துணைத் தலைவர் கைது

எம்ஏசிசி: நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய அம்னோ தொகுதி துணைத் தலைவர் கைது

499
0
SHARE
Ad

ஈப்போ: பேராக்கில் உள்ள அம்னோ தொகுதியின் துணைத் தலைவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்துள்ளது.

மாற்றுத்திறனாளி அமைப்புக்குச் சொந்தமான 800,000 ரிங்கிட் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியக் காரணத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் அந்த அமைப்பின் தலைவராவார். மேலும், பேராக்கில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியையும் அவர் வகிக்கிறார்.

#TamilSchoolmychoice

61 வயதான அவர் செப்டம்பர் 3-ஆம் தேதி கைது செய்யப்பட்டதை பேராக் எம்ஏசிசி இயக்குனர் முகமட் பாவ்சி முகமட் உறுதிப்படுத்தினார்.

சந்தேகநபர் சங்கத்தின் கணக்கிலிருந்து தனது தனிப்பட்ட கணக்கிற்கு பணத்தை மாற்றியதாக எம்ஏசிசிக்கு ஓர் அறிக்கை அளிக்கப்பட்டதாக பாவ்சி கூறினார்.

“சங்க நிதியை முறைகேடாக பயன்படுத்த தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

“அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்காக எம்ஏசிசி சட்டத்தின் 23- வது பிரிவின் கீழ் இந்த வழக்கை எம்ஏசிசி விசாரித்து வருகிறது” என்று அவர் கூறினார்.

எவ்வாறாயினும், இந்த வழக்கு சந்தேக நபரின் எந்தவொரு அரசியல் நடவடிக்கைகளுக்கும் தொடர்புடையது அல்ல என்று பாவ்சி தெரிவித்தார்.