Home One Line P2 “விஜய் மியூசிக்” – ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் புதிய அலைவரிசை

“விஜய் மியூசிக்” – ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் புதிய அலைவரிசை

1048
0
SHARE
Ad

சென்னை – தமிழ் நாட்டின் தொலைக்காட்சி அலைவரிசையான ஸ்டார் விஜய் “விஜய் மியூசிக்” என்ற புதிய அலைவரிசை ஒன்றைத் தொடக்கவிருக்கிறது.

தமிழ் நாட்டுத் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கிடையில் நடைபெற்று வரும் மறைமுக யுத்தம் அனைவரும் அறிந்ததுதான். முதல் நிலையில் இன்னும் இருந்து வருவது சன் டிவிதான். பல அலைவரிசைகளைக் கொண்டிருக்கிறது சன் டிவி.

இதன் பிரசித்தி பெற்ற அலைவரிசைகளில் ஒன்று சன் மியூசிக் எனப்படும் பாடல்களுக்கான அலைவரிசையாகும். அதற்குப் போட்டியாக இப்போது விஜய் மியூசிக் என்ற அலைவரிசையை ஸ்டார் விஜய் அறிமுகப்படுத்துகிறது.

#TamilSchoolmychoice

ஸ்டார் விஜய் அலைவரிசையின் முக்கிய நிகழ்ச்சி “பிக்பாஸ்”. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நான்காவது ஆண்டாக எதிர்வரும் அக்டோபர் 4-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

பிக்பாஸ் தொடங்கவிருக்கும் அந்த நாளிலேயே விஜய் மியூசிக் அலைவரிசையும் தொடங்கப்படுகிறது.

கொவிட்-19 பாதிப்புகளுக்கிடையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் எவ்வாறு பங்கேற்கப் போகிறார்கள். எந்த மாதிரியான நடைமுறைகள், கட்டுப்பாடுகள் பின்பற்றப்படவிருக்கின்றன என்ற ஆர்வம் இரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.

இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் யார் என்ற ஆர்வமும் ஏற்பட்டிருக்கிறது. கடந்த முறை மலேசியாவிலிருந்து முகேன் ராவ் பங்கு பெற்றார். இறுதியில் முதலாவதாக வெற்றியும் பெற்றார் முகேன் ராவ்.

ஆனால் இந்த முறை கொவிட்-19 பாதிப்புகளால் வெளிநாட்டிலிருந்து யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது.