கோத்தா கினபாலு: சபா மாநில சட்டமன்றத்தில் இறுதியாக சபா மாநில பாஸ் கட்சியின் செயலாளர் அலிஅக்பர் குலாசான் சட்டமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் சபா முதல்வர் யோங் டெக் லீ, சுஹைமி நசீர் மற்றும் அம்னோவைச் சேர்ந்த ரைமி உங்கி, பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த ஜாபாரி வள்ளியம் மற்றும் அமிசா யாசின் ஆகிய 5 பேருடன் அலிஅக்பர் இன்று நியமிக்கப்பட்டார்.
சட்டமன்றத்தில் அதிக எண்ணிக்கையிலான பெண் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்த போதிலும் ஒரே ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினராக அமிசா நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த சபா தேர்தலில், மொத்தம் 73 சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இருப்பினும், மாநில அரசியலமைப்பு முதல்வரை மேலும் ஆறு சட்டமன்ற உறுப்பினர்களை நியமிக்க அனுமதிக்கிறது. அவர்கள் மாநில சட்டமன்றத்தில் வாக்களிக்கும் அதிகாரம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
இந்த நியமனம் குறித்து, பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங், முதல்வர் ஹாஜிஜி நூர் மற்றும் பிரதமர் மொகிதின் யாசினுக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்தார்.
முன்னதாக, பாஸ் கட்சியின் பிரதிநிதி சட்டமன்ற உறுப்பினரக் நியமிக்கப்படக்கூடாது என்று ஜிஆர்எஸ் கூட்டணி கட்சிகளான பிபிஎஸ் மற்ரும் ஸ்டார் அறிவுறுத்தி வந்தன.