Home One Line P1 தேசிய பாதுகாப்பு மன்றம் கிள்ளான் கட்டுப்பாடுகளின் விவரங்களை அறிவிக்கும்

தேசிய பாதுகாப்பு மன்றம் கிள்ளான் கட்டுப்பாடுகளின் விவரங்களை அறிவிக்கும்

606
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேசிய பாதுகாப்பு மன்றம் கிள்ளானில் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்துவது குறித்த விவரங்களை அறிவிக்கும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று தெரிவித்தார்.

அவரது சார்பாக சிலாங்கூர் மாநில செயலாளர் டத்தோ முகமட் அமீன் அகமட் அஹியா தலைமையில் கிள்ளான் மாவட்ட கட்டுப்பாட்டு ஆணையை ஒருங்கிணைக்க சிலாங்கூர் மாநில அரசு இன்று ஒரு கூட்டத்தை நடத்தியதாக அமிருடின் கூறினார்.

இந்த சந்திப்பின் போது பல்வேறு துறைகளின் கருத்துக்கள் வழங்கப்பட்ட பின்னர், சிலாங்கூர் மாநில அரசு, கிள்ளானில் கட்டுப்பாடுகள் அமலாக்கத்திற்கான அனைத்து கருத்துகளையும், திட்டங்களையும் தேசிய பாதுகாப்பு மன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது என்று கூறினார்.

#TamilSchoolmychoice

“தகவல்களில் ஒருங்கிணைப்பு மற்றும் சீரான தன்மைக்காக, மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள தேசிய பாதுகாப்பு மன்றம் கிள்ளானில் கட்டுப்பாடுகளை செயல்படுத்துவது குறித்த விவரங்களை அறிவிக்கும். மேலும், மாநில அரசு அதன் ஒத்துழைப்பை அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து பொதுமக்களின் நலனை உறுதிசெய்யும்.” என்று இன்று ஒரு சுருக்கமான அறிக்கையில் அவர் கூறினார்.

“இந்த நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான மேலதிக நடவடிக்கையாக மாநில அரசு சிவப்பு மண்டலங்களில் கொவிட் -19 பரிசோதனையைத் தொடரும்” என்று அவர் கூறினார்.

சிலாங்கூரில் கிள்ளான் உட்பட, சபாவில் சண்டாகான், பாபார் மற்றும் துவாரன் ஆகிய மாவட்டங்களில் அக்டோபர் 9 முதல் 14 நாட்களுக்கு நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்த இருப்பதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் நேற்று கூறினார்.