கோத்தா கினபாலு: முன்னாள் செனட்டர் டத்தோ காட்ஸிம் முகமட் யஹ்யா இன்று இஸ்தானா நெகிரியில் ஆளுநர் துன் ஜுஹார் மஹிருடின் முன்னிலையில் சபா மாநில சட்டமன்ற சபாநாயகராக பதவியேற்றார்.
பதவியேற்பு விழாவில் பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த மெம்பாகுட் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முகமட் அரிபின் முகமட் ஆரிப், சபா சிறப்புப் பணிகள் அமைச்சராகவும், சுகோ சட்டமன்ற உறுப்பினரான அம்னோ கட்சியின் டத்தோ ஜாப்ரி அரிபின் மாநில சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராகவும் பதவியேற்றார்.
அம்னோவின் தஞ்சோங் கெராமாட் சட்டமன்ற உறுப்பினர் ஷாஹெல்மி யஹ்யா (சமூக மேம்பாடு மற்றும் மக்கள் நல்வாழ்வு அமைச்சர்); கரம்புனை சட்டமன்ற உறுப்பினர் அம்னோவின் டத்தோ யாகுப் கான் (அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க அமைச்சர்) மற்றும் ஸ்டார் கட்சியின் சூக் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ எஸ்ரான் ஆங்கின் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.
மேலும், 18 பேர் துணை அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.