கோலாலம்பூர் : நேற்று திங்கட்கிழமை இரவு (அக்டோபர் 19) தலைநகர் புத்ரா உலக வாணிப மையத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெறவிருந்த அம்னோ-பாஸ் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டது.
தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் ஆலோசனையின் அடிப்படையில் இந்த சந்திப்புக் கூட்டம் இரத்து செய்யப்பட்டது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
எனினும், அம்னோ பாஸ் தலைவர்களிடையே அண்மையக் காலமாக நிலவி வரும் கருத்து முரண்பாடுகளின் பிரதிபலிப்பாக இந்த சந்திப்புக் கூட்டம் இரத்து செய்யப்பட்டதாக பார்க்கப்படுகிறது.
முவாபக்காட் நேஷனல் கூட்டணியில் பெர்சாத்து கட்சி அங்கம் வகிப்பது, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு ஆதரவு தருவது போன்ற சில முக்கிய அம்சங்களை நேற்றைய கூட்டம் விவாதிக்கவிருந்தது.
இதற்கிடையில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு பகாங் ஜண்டா பாய்க் நகரில் நடைபெறவிருந்த அம்னோ உச்சமன்றக் கூட்டத்தின் கூட்டமும் இரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் கூட்டத்திலும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவால் மாநிலங்களுக்கு இடையிலான பயணத் தடையால் இந்தக் கூட்டம் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.