Home 13வது பொதுத் தேர்தல் கேலாங் பாத்தாவில் அப்துல் கனி ஒத்மான் போட்டி!

கேலாங் பாத்தாவில் அப்துல் கனி ஒத்மான் போட்டி!

980
0
SHARE
Ad

fnghani14e

ஜோகூர்,ஏப்ரல் 16 – பொதுத்தேர்தலில் ஜோகூர் மாநிலம் கேலாங் பாத்தா நாடாளுமன்ற தொகுதியில், ஜ.செ.க மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கை எதிர்த்து, ஜோகூர் மாநில தேசிய முன்னணி தலைவரான அப்துல் கனி ஒத்மான் களமிறங்கவுள்ளார்.

இன்று காலை, ஜோகூர் மாநில தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் இத்தகவல் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

எனவே, அப்துல் கனி ஒத்மானின் நடப்பு சட்டமன்ற தொகுதியான செரோமில், தேசிய முன்னணி சார்பாக வேறு ஒரு வேட்பாளர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பாசீர் கூடாங் நாடாளுமன்ற தொகுதியிலிருந்து காலிட் நோர்தீன், பெர்மாஸ் சட்டமன்ற தொகுதிக்கு இடம்பெயருகிறார். அத்துடன் டத்தோ நோர் முகமது ஜஸ்லான் இம்முறை தனது பூலாய் நாடாளுமன்ற தொகுதியிலேயே போட்டியிடவுள்ளார்.

இது தவிர ஜோகூர்பாரு நாடாளுமன்ற தொகுதியில் ஷாரீர் சமத்தும், பெங்கராங் நாடாளுமன்ற தொகுதியில் அம்னோ புத்ரி தலைவர் அஸாலினா ஒத்மானும் தங்களது தொகுதியிலேயே போட்டியிடவுள்ளனர்.