Home One Line P2 அமெரிக்கா: அதிகமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன

அமெரிக்கா: அதிகமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன

656
0
SHARE
Ad

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஏற்கனவே பல இலட்சக்கணக்கானவர்கள் தபால் மூலமாக வாக்களித்துள்ள நிலையில், ஆரம்பக்கட்ட வாக்குப்பதிவில் 7 கோடி பேர் வாக்களித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் நவம்பர் 3- ஆம் தேதியன்று அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஜோ பைடன் போட்டியிடுகிறார்.

இரண்டு வேட்பாளர்களும் பிரச்சாரப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

#TamilSchoolmychoice

ஜோர்ஜ் பிளாய்ட் எனும் கருப்பினத்தவர் மே மாதம் காவல் துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதும், அதனால் எழுந்த போராட்டங்களும் தேர்தலில் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பதற்கு காரணமாகக் கருதப்படுகிறது.

மேலும், கொவிட்-19 தொற்று சம்பந்தமாக டிரம்ப் எடுத்த முடிவுகளும் இதில் ஒரு காரணமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.