Home One Line P1 18 வயது வாக்களிக்கும் முறை அடுத்த ஜூலைக்குள் செயல்படுத்தப்படும்

18 வயது வாக்களிக்கும் முறை அடுத்த ஜூலைக்குள் செயல்படுத்தப்படும்

659
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் வாக்களிப்பு மற்றும் தானியங்கி வாக்காளர் பதிவு அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) அமைச்சர் டத்தோ தக்கியுடின் ஹாசன் தெரிவித்தார்.

தேர்தல் ஆணையம் தற்போது தேசிய பதிவு இலாகாவுடன் பணியாற்றுவது உட்பட சில விஷயங்களைச் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது என்று அவர் கூறினார்.

“தானியங்கி வாக்காளர் பதிவு மற்றும் பிற தொடர்புடைய விஷயங்களை செயல்படுத்துவதற்கான தயாரிப்பில் தேர்தல் ஆணையம் மற்றும் பதிவு இலாகா ஆகியவற்றின் பணிக்குழு இணைந்து செயல்படுகிறதது. மேலும், கடந்த ஆண்டு ஜூலை 25-ஆம் தேதி செனட் திருத்தங்களை ஒப்புதல் அளித்த நாளிலிருந்து 18 முதல் 24 மாதங்களுக்குள் அனைத்து தயாரிப்புகளும் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறது, “என்று அவர் இன்று மக்களவையில் கூறினார்.