Home One Line P2 ஜோ பைடன் 253 வாக்குகளுடன் முன்னணி – டிரம்ப் 213

ஜோ பைடன் 253 வாக்குகளுடன் முன்னணி – டிரம்ப் 213

989
0
SHARE
Ad

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் கட்டம் கட்டமாக வெளியாகிக் கொண்டிருக்கும் பரபரப்பான சூழ்நிலையில் இன்று வியாழக்கிழமை (நவம்பர் 5) மலேசிய நேரம் காலை 8.30 மணி நிலவரப்படி தொடர்ந்து ஜோ பைடன் முன்னணி வகிக்கிறார்.

மொத்தமுள்ள 538 தேர்தல் வாக்கு தொகுப்புகளில் அவர் இதுவரையில் 253 வாக்குகளைப் பெற்றுள்ளார். டிரம்ப் 213 வாக்குகளுடன் பின்தங்கியிருக்கிறார்.

பல மாநிலங்களில் இன்னும் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. எனவே, இறுதி நேரத்தில் வெற்றி வாய்ப்புகள் அதிரடியாக மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

#TamilSchoolmychoice

தேர்தல் நடைமுறைகள், வாக்குகள் எண்ணப்படுவது குறித்துக் கடுமையாகச் சாடிய டொனால்ட் டிரம்ப் “தேர்தல் முடிவுகள் குறித்து நாங்கள் அமெரிக்க உச்சநீதிமன்றத்திற்குச் செல்வோம். அனைத்து வாக்கு எண்ணிக்கையும் நிறுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

எனினும் அத்தகைய சட்ட முயற்சி எதனையும் அவர் இதுவரையில் தொடங்கவில்லை.