Home 13வது பொதுத் தேர்தல் தே.மு வேட்பாளர் பட்டியலில் இப்ராகிம் அலியின் பெயர் இல்லை – பாசீர் மாஸ் தொகுதிக்கு ...

தே.மு வேட்பாளர் பட்டியலில் இப்ராகிம் அலியின் பெயர் இல்லை – பாசீர் மாஸ் தொகுதிக்கு சே ஜொஹான் அறிவிப்பு

747
0
SHARE
Ad

Ibrahim-Ali---Sliderகோலாலம்பூர், ஏப்ரல் 16 – கிளாந்தான் மாநிலத்திற்கான வேட்பாளர் பட்டியலை தேசிய முன்னணி இன்று வெளியிட்டுள்ளது.

அதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொகுதியான பாசீர் மாஸ்ஸில், பெர்க்காசா தலைவர் இப்ராகிம் அலியின் பெயர் இடம் பெறவில்லை.

அவருக்குப் பதிலாக அத்தொகுதியில், அம்னோ துணைத் தலைவர் சே ஜொஹான் சே பா தேசிய முன்னணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாசீர் மாஸ் நாடாளுமன்ற தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அம்னோ வேட்பாளர் அகமத் ராஸ்டி மகமத்தை விட 8, 991 வாக்குகள் பெரும்பான்மை பெற்று இப்ராகிம் அலி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.