Home One Line P2 இரஷியத் தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி மறைவு : கவிஞர் வைரமுத்து இரங்கல்

இரஷியத் தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி மறைவு : கவிஞர் வைரமுத்து இரங்கல்

977
0
SHARE
Ad
இரஷியத் தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி

சென்னை : இரஷியாவின் தமிழறிஞர் பேராசிரியர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி நேற்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) மாஸ்கோவில் காலமானதை முன்னிட்டு அவரது நண்பரான கவிஞர் வைரமுத்து தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் வைரமுத்து பதிவிட்டிருக்கும் இரங்கல் செய்தி பின்வருமாறு:

ரஷ்யத் தமிழறிஞர்
அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி
மாஸ்கோவில் மறைவுற்றார்.

#TamilSchoolmychoice

வால்காவோடு வைகையை
இணைத்தவருக்கு
எங்கள் புகழ் வணக்கம்.

இது ஈடுசெய்தாக வேண்டிய இழப்பு.
செய்தால்தான் துப்யான்ஸ்கியின்
உயிர் ஓய்வுறும்.

யார் முன்வரினும் எங்கள் உறுதுணையும்
உறுபொருளும் உண்டு