Home One Line P1 நம்பிக்கை கூட்டணி நண்பர்களை நினைவுகூர்வதாக கூறிய பைசால் அசுமு!

நம்பிக்கை கூட்டணி நண்பர்களை நினைவுகூர்வதாக கூறிய பைசால் அசுமு!

535
0
SHARE
Ad

ஈப்போ: இன்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 4) சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இழந்த பிறகு பேராக் மந்திரி பெசார் அகமட் பைசால் அசுமுவின் கூற்று பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட அசுமு, எதிர்க்கட்சியில் இருக்கும் நம்பிக்கை கூட்டணி நண்பர்களையும் அவ்வப்போது நினைவுக்கூர்ந்ததாகக் கூறினார்.

“நம்பிக்கை கூட்டணி நண்பர்களுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். நான் உங்கள நினைத்து ஏங்கியதுண்டு,” என்று அகமட் பைசால் கூறினார்.

#TamilSchoolmychoice

இன்று நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் செண்டேரியாங் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும், அசுமு, பெரும்பான்மையான மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறத் தவறிவிட்டார்.

மொத்தம் 48 வாக்குகள் அவருக்கு எதிராக செலுத்தப்பட்டன. 10 பேர் மட்டுமே அவரை ஆதரித்தனர்.