Home One Line P2 பிக்பாஸ் 4 : நடிகர் ஆரி – ரம்யா பாண்டியன் காப்பாற்றப்பட்டனர்

பிக்பாஸ் 4 : நடிகர் ஆரி – ரம்யா பாண்டியன் காப்பாற்றப்பட்டனர்

1490
0
SHARE
Ad

சென்னை : தமிழகத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் 60 நாட்களைக் கடந்து தொடர்ந்து ஒளியேறி வரும் பிக்பாஸ் (4) தொடர்   நிகழ்ச்சியில் இந்த வாரம் பிக் பாஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட 7 பேர் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றனர்.

ஆஜித், ஆரி அர்ஜூனன், அனிதா சம்பத், நிஷா, ரம்யா பாண்டியன், சனம், ஷிவானி ஆகியோரே அந்த எழுவராவார்.

நேற்று சனிக்கிழமை (டிசம்பர் 5) ஒளியேறிய நிகழ்ச்சியில் பரிந்துரைக்கப்பட்டவர்களில் ஆரியும், ரம்யா பாண்டியனும் இரசிகர்களால் காப்பாற்றப்பட்டிருப்பதாக கமல்ஹாசன் அறிவித்தார்.

#TamilSchoolmychoice

எஞ்சிய ஐவரில் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியின் மூலம் பிக் பாஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றப்படுவார்.

கடந்த வாரத்தில், பிக்பாஸ் இல்லத்திலிருந்து மாடலிங் துறையில் புகழ்பெற்ற பங்கேற்பாளரான சம்யுக்தா வெளியேற்றப்பட்டார்.