Home One Line P1 பொதுப்பணித்துறை நியாயமாக பொது மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்!

பொதுப்பணித்துறை நியாயமாக பொது மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்!

358
0
SHARE
Ad

கோலாலம்பூர்: விபத்துக்குள்ளானவர்கள் அமைச்சர்களாக இருக்கும்போது மட்டுமே கோலா லங்காட் பொதுப்பணித் துறை மன்னிப்பு கோருவது நியாயமில்லை என்று கோலா லங்காட் பிகேஆர் இளைஞர் பிரிவு தெரிவித்துள்ளது.

மாவட்ட பொதுப்பணித்துறை நியாயமாக இருக்க வேண்டும் என்றும், குழிகள் காரணமாக விபத்துக்களில் சிக்கியுள்ள அனைத்து சாலை பயனர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் அதன் தலைவர் முகமட் ஷா ரெஸ்ஸா முகமட் துனிமான் கூறினார்.

பந்திங்கில் ஒரு குழியில் சிக்கி கீழே விழுந்ததால், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடினிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொதுப்பணித்துறை மன்னிப்பு கோரியது.

#TamilSchoolmychoice

“கோலா லங்காட் பணித் துறை நியாயமாக இருக்க வேண்டும் மற்றும் விபத்துக்களில் சிக்கிய மற்ற சாலை பயனர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதன் பொறுப்பற்ற தன்மையால் அபாயகரமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இன்னும் பல குழிகள் உள்ளன. விபத்தில் அமைச்சர் சம்பந்தப்பட்ட பின்னரே மன்னிப்பு கேட்கும் நோக்கம் எழுந்துள்ளதா?” என்று முகமட் ஷா ஓர் அறிக்கையில் கூறினார்.

சாலை பயனர்களைக் கையாள்வதில் ஒருதலைப்பட்சமாக இருப்பதை நிறுத்துமாறு முகமட் ஷா பொதுப்பணித்துறைக்கு அறிவுறுத்தினார்.

“சாதாரண மக்கள் ஒவ்வொரு ஆண்டும் சாலை வரி செலுத்துகிறார்கள், மேலும் பொதுப்பணித்துறை அவர்கள் விபத்துக்களில் ஈடுபடும்போது அமைதியாக வைத்திருக்கிறது,” என்று அவர் கூறினார்.

கைரி ஜமாலுடின் சைக்கிள் ஓட்டத்தின் போது, அவரது சைக்கிள் சக்கரம் குழியில் சிக்கி கீழே விழ்ந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வந்த நிலையில், நேற்று கோலா லங்காட் பொதுப்பணித்துறை, அமைச்சரிடம் மன்னிப்பு கோரியது.

“கோலா லங்காட் ஜே.கே.ஆர் அமைச்சருக்கு நேர்ந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சர் விரைவில் குணமடைய வேண்டுகிறோம்,” என்று அது குறிப்பிட்டுள்ளது.

கைரிக்கு இடது நெற்றியில், மூக்கு மற்றும் வாயில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், கைரியின் உதவியாளர் ராஜா சியாஹிர் அபுபக்கர், அமைச்சருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தீவிரமான காயங்கள் எதுவும் இல்லை என்றும் கூறியிருந்தார்.