வாஷிங்டன் : அப்படி இப்படியென்று ஜனவரி 20-ஆம் தேதி நெருங்கி விட்டது. இன்னும் 3 நாட்கள்தான்!
ஆம்! அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜோ பைடன் பதவியேற்கப் போகும் தேதிதான் ஜனவரி 20.
பைடன் பதவியேற்றவுடன் முதல் நாள் அவர் என்னென்ன புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப் போகிறார் – டிரம்பின் முந்தைய உத்தரவுகளில் எவற்றைத் தூக்கியெறியப் போகிறார் – மாற்றப் போகிறார் – என்பதையெல்லாம் அறிந்து கொள்ள அகில உலகமுமே காத்திருக்கிறது.
பருவநிலை மாற்றத்திற்கான பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து டிரம்ப் வெளியேறியிருந்தார். அதை இரத்து செய்து மீண்டும் அந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா இணையும் முடிவை டிரம்ப் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்து, பெரும்பான்மையான முஸ்லீம் நாடுகளுக்கான பயணத் தடையை பைடன் மீண்டும் நிலைநாட்டும் உத்தரவையும் பிறப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற மேலும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட புதிய உத்தரவுகளில் பைடன் கையெழுத்திடுவார். அந்த உத்தரவுகள் யாவை என்பதை அறிந்து கொள்ள ஊடகங்களும் உலக நாடுகளும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.