Home One Line P1 நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாடுகள் உள்ள மாநிலங்களிலும் எல்லைகள் கடக்கத் தடை

நிபந்தனைக்குட்பட்ட கட்டுப்பாடுகள் உள்ள மாநிலங்களிலும் எல்லைகள் கடக்கத் தடை

473
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் உள்ள மாநிலங்களில் கூட, மாநிலங்களுக்கு இடையேயான பயணத் தடை இன்னும் அமலில் உள்ளதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறினார்.

மார்ச் 4-ஆம் தேதி இந்தக் கட்டுப்பாடுகள் முடிவடைவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் பல்வேறு மாநிலங்களின் நிலை குறித்து தேசிய பாதுகாப்பு மன்றம் விவாதிக்கும் என்று அமைச்சர் கூறினார்.

“மார்ச் 4- க்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் நான் இந்த அறிவிப்பை வெளியிடுவேன்,” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.