Home நாடு இந்திய சமூகங்களின் புத்தாண்டுகளுக்கு வாழ்த்துகள் பதிவிட்ட மாமன்னர்

இந்திய சமூகங்களின் புத்தாண்டுகளுக்கு வாழ்த்துகள் பதிவிட்ட மாமன்னர்

619
0
SHARE
Ad

கோலாலம்பூர் : எல்லா இந்தியர்களின் திருவிழாக்களுக்கும், கொண்டாட்டங்களுக்கும் வாழ்த்துகள் தெரிவித்து தனது சமூக ஊடகங்களில் மாமன்னர் தம்பதியர் பதிவிடுவது வழக்கமாகும்.

அந்த வகையில் நேற்றும் இன்றும் கொண்டாடப்பட்ட இந்திய சமூகங்களின் புத்தாண்டுகளுக்கு மாமன்னர் தம்பதியர் தனித்தனியாக ஒவ்வொரு சமூகத்திற்கும் வாழ்த்துகளைப் பதிவிட்டனர்.

விஷூ புத்தாண்டு கொண்டாடும் மலையாளிகள், உகாதி தெலுங்கு புத்தாண்டைக் கொண்டாடும் தெலுங்கு சமூகத்தினர், சித்திரைப் புத்தாண்டு கொண்டாடும் தமிழர்கள், வைசாகி புத்தாண்டு கொண்டாடும் சீக்கிய சமூகத்தினர் என அனைத்து சமூகத்தினருக்கும் மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல் முஸ்தாபா பில்லா தம்பதியர் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். தங்களின் வாழ்த்துச் செய்திகளைத் தங்களின் அதிகாரபூர்வ சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்.

#TamilSchoolmychoice