Home இந்தியா டி.ஆர்.பாலு கொரொனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதி

டி.ஆர்.பாலு கொரொனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதி

511
0
SHARE
Ad

சென்னை : இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரொனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து பல பிரமுகர்கள் கொவிட்-19 தொற்றுகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பங்கேற்றவருமான சகாயம் கொவிட்-19 தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு கொவிட்-19 தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மகன் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தமிழ்நாடு சட்டமன்ற வாக்களிப்புக்கு முன்னரே திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கொவிட்-19 தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்தத் தொற்றுடனே வாக்களிப்பிலும் கலந்து கொண்டார்.