Home நாடு முஸ்லீம் அல்லாதோரின் சமய வழக்கப்படி இறுதிச் சடங்கை மேற்கொள்ள ஒற்றுமை அமைச்சு அனுமதி

முஸ்லீம் அல்லாதோரின் சமய வழக்கப்படி இறுதிச் சடங்கை மேற்கொள்ள ஒற்றுமை அமைச்சு அனுமதி

610
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மே 12 முதல் ஜுன் 7 வரை, நடமாட்டக் கட்டுப்பாடு 3.0 காலகட்டத்தில், முஸ்லீம் அல்லாதோரின் இறுதிச் சடங்குகளை அவரவர் முறைப்படி மேற்கொள்ள தேசிய பாதுகாப்பு மன்றம் அனுமதி வழங்கியது.

இறுதிச் சடங்கில் கடைப்பிடிக்க வேண்டிய புதிய நடைமுறைகளையும், அரசாங்கத்தின் நடமாட்டக் கட்டுப்பாடு விதிமுறைகளையும் ஒற்றுமை அமைச்சு வெளியிட்டுள்ளது. ஒற்றுமை அமைச்சின் இந்தத் தகவலை மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் உறுதிப்படுத்தினார்.

இறுதிச் சடங்குகளில் கடைப்பிடிக்க வேண்டிய நடமாட்டக் கட்டுப்பாடு விதிமுறைகளை, ஒற்றுமை அமைச்சு விரிவாகக் குறிப்பிட்டிருந்தது. முஸ்லீம் அல்லாதோர் வீட்டில், வழிபாட்டுத்தலங்களில் மற்றும் தகனம் செய்யும் இடத்தில் அல்லது மயானத்தில் கடைப்பிடிக்க வேண்டிய புதிய நடைமுறைகள் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளன.

வீட்டில் கடைப்பிடிக்க வேண்டிய புதிய நடைமுறைகள் :-

#TamilSchoolmychoice

– சடலத்தைக் குளிப்பாட்டி, உடை அணிவித்துத் தயார் செய்ய 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்

– இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர், வீட்டின் அளவைப் பொறுத்து;

– சடலத்தைத் தகனம் செய்ய அல்லது மயானத்திற்கு 20 பேருக்கு மேல் போகாத நெருங்கிய உறவினர்கள் மட்டுமே செல்ல முடியும்.

வழிபாட்டுத்தளங்களில்/ பொது இடங்களில், 5 பேர் மட்டுமே சடலத்தைக் குளிப்பாட்டி, உடை அணிவித்துத் தயார் செய்ய முடியும்;

– இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள, வழிபாட்டுத்தளங்களின் பொறுப்பாளர்கள் தவிர 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்;

– சடலத்தைத் தகனம் செய்ய அல்லது மயானத்திற்கு 20 பேருக்கு மேல் போகாத நெருங்கிய உறவினர்கள் மட்டுமே செல்ல முடியும்

தகனம் செய்யும் இடத்தில் அல்லது மயானத்தில் கடைப்பிடிக்க வேண்டிய புதிய நடைமுறைகள் :-

– சடலத்தை 5 பேர் மட்டுமே குளிப்பாட்டி, உடை அணிவித்துத் தயார் செய்ய முடியும்

– இடத்தின் பொறுப்பாளர்களைச் சேர்க்காமல், நெருங்கிய உறவினர்கள் 20 பேர் மட்டுமே இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியும்

கருமக்கிரியை

– ஆற்றங்கரை அல்லது கடற்கரையில் நடைபெறும் கருமக்கிரியை சடங்கில் நெருங்கிய உறவினர்கள் 5 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.

“நடமாட்டக் கட்டுப்பாடு காலகட்டத்தில் அரசாங்கம் வழங்கியிருக்கும் இந்த சலுகையை முறையாக, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு உட்பட்டு, நம்மை விட்டுப் பிரிந்து போன சொந்த பந்தங்களுக்கு உரிய இறுதி மரியாதையைச் செலுத்த வேண்டும்” என மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் கேட்டுக்கொண்டார்.