Home நாடு கொவிட்-19: இதுவரை இல்லாத உச்சம் – 98 மரணங்கள் – 9,020 தொற்றுகள்

கொவிட்-19: இதுவரை இல்லாத உச்சம் – 98 மரணங்கள் – 9,020 தொற்றுகள்

613
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை (மே 29) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் 98 மரணங்கள் நிகழ்ந்து கொரொனாவின் கோரத் தாண்டவம் புதிய உச்சத்தை அடைந்திருக்கிறது.

பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை வரலாற்றிலேயே உச்ச பட்சமாக 9,020 ஆக உயர்ந்துள்ளது.

இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம் பதிவான தொற்றுகளின் எண்ணிக்கை 558,534- ஆக உயர்ந்துள்ளது.

#TamilSchoolmychoice

சுகாதார இலாகாவின் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அறிக்கை ஒன்றின் வழி இன்றைய விவரங்களை வெளியிட்டார்.

பதிவான 9,020 புதிய தொற்றுகளில் 5 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்டவையாகும். எஞ்சிய 9,015 தொற்றுகள் அனைத்தும் உள்நாட்டிலேயே பெறப்பட்டதாகும்.

தொற்றுகளில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,527 ஆகும். இதைத் தொடர்ந்து இதுவரையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 479,666 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதிலும் மருத்துவமனைகளில் 76,218 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 844 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 430 பேர் சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மரண எண்ணிக்கை 98 ஆக பதிவான நிலையில் இதுவரையிலான மரண எண்ணிக்கை 2,650 ஆக உயர்ந்திருக்கிறது.

மாநிலங்கள் அளவில் மிக அதிகமான தொற்றுகளை சிலாங்கூர் மாநிலம் மீண்டும் பதிவு செய்தது. 2,836 தொற்றுகளை சிலாங்கூர் பதிவு செய்தது. அதனை அடுத்து கிளந்தானில் 907 தொற்றுகள் பதிவாயின. அடுத்த நிலையில் 898 தொற்றுகளை நெகிரி செம்பிலான் பதிவு செய்தது.

789 தொற்றுகளை கோலாலம்பூர் பதிவு செய்துள்ளது. ஜோகூரில் 468 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.