Home உலகம் ஸ்பெயின், தடுப்பூசி போட்டவர்களுக்கு கதவுகளைத் திறந்தது

ஸ்பெயின், தடுப்பூசி போட்டவர்களுக்கு கதவுகளைத் திறந்தது

435
0
SHARE
Ad

மேட்ரிட் : கொவிட்-19 தொற்றால் ஐரோப்பாவில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று ஸ்பெயின். தற்போது அங்கு தடுப்பூசி போடும் திட்டம் தீவிரமாக அமுலாக்கப்பட்டிருக்கிறது.

மேலும் பல ஐரோப்பிய நாடுளில் கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டு விட்டன. இதனைத் தொடர்ந்து தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பயணம் செய்ய தனது எல்லைக் கதவுகளைத் திறந்து விடும் முதல் நாடாக ஸ்பெயின் திகழ்கிறது.

திங்கட்கிழமை முதல் (ஜூன் 7) ஸ்பெயின் நாட்டிற்குள் பல அண்டை நாடுகளில் இருந்து கொவிட் தடுப்பூசிகள் போட்டுக் கொண்ட பயணிகள் நுழையத் தொடங்கியிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

இதன் மூலம், ஸ்பெயினுக்கு வருவாய் தரும் முக்கியத் தொழில்களில் ஒன்றான சுற்றுலாத்துறை வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பெயின் முடிவைத் தொடர்ந்து மேலும் பல ஐரோப்பிய நாடுகள் தங்களின் எல்லைகளை கொவிட் தடுப்பூசி போட்டவர்களுக்காகத் திறந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் தற்போது தொடங்கியிருக்கும் கோடைகாலத்தைத் தொடர்ந்து சுற்றுலாத் துறை மேம்பாடு காணும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.

மற்ற பல ஐரோப்பிய நாடுகளும் அடுத்தடுத்த நாட்களில் ஸ்பெயின் எடுத்த முடிவைப் போன்று முடிவெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்கிடையில் சுற்றுலாத் துறை பயணங்கள் மேலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டிருக்கிறது.