Home நாடு சிலாங்கூர்: சட்டமன்றம் கூட்டப்படுவதற்கு முன்பு சுல்தான் ஒப்புதல் பெறப்படும்

சிலாங்கூர்: சட்டமன்றம் கூட்டப்படுவதற்கு முன்பு சுல்தான் ஒப்புதல் பெறப்படும்

527
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சிலாங்கூர் மாநில சட்டமன்ற சபாநாயகர் எங் சுயீ லிம் ஆகஸ்டு மாதம் சட்டமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு சிலாங்கூர் சுல்தானின் ஒப்புதலைப் பெறுவார்.

நேற்று சட்டமன்ற திறப்பு தொடர்பான கலந்துரையாடலைத் தொடர்ந்து சுல்தான் ஷராபுடினுக்கு கடிதம் அனுப்ப சட்டமன்றம் ஒப்புக் கொண்டதாக எங் கூறினார்.

#TamilSchoolmychoice

“நாங்கள் இந்த விஷயத்தை மந்திரி பெசார் உடன் விவாதித்தோம். நாங்கள் நிர்ணயித்த தேதி விரைவில் சிலாங்கூர் சுல்தானுக்கு வழங்கப்படும்.

“தற்போதைய அவசரகாலத்தின் போது சட்டமன்றம் அமர்வதற்கான எங்கள் முன்மொழிவு சுல்தானின் சம்மதத்தைப் பெற்றால், மந்திரி பெசார் மாமன்னர் அல்- சுல்தான் அப்துல்லா ஆகியோருக்கு சிறப்பு மாநில சட்டமன்றத்தை நடத்துவதற்கு ஒப்புதல் பெற கடிதம் அனுப்புவார்,” என்று பெர்னாமாவைத் தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.