Home நாடு கொவிட்-19: புதிய தொற்றுகள் 5,218 – நெகிரி செம்பிலானும் மோசமாகப் பாதிப்பு

கொவிட்-19: புதிய தொற்றுகள் 5,218 – நெகிரி செம்பிலானும் மோசமாகப் பாதிப்பு

1103
0
SHARE
Ad

கோலாலம்பூர்:  நாட்டில் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து இன்றும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பதிவு செய்யப்பட்டன.

இன்று திங்கட்கிழமை (ஜூன் 28) வரையிலான ஒரு நாளில் நாட்டில் மொத்தம் 5,218 தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன.

சிலாங்கூர் 1,989 தொற்றுகளோடு மிக அதிகமான தொற்றுகளைப் பதிவு செய்த மாநிலமாக முதலிடத்தில் இருந்து வருகிறது.

#TamilSchoolmychoice

இன்றைய எண்ணிக்கையைத் தொடர்ர்ந்து இதுவரையில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 739,266 ஆக உயர்ந்துள்ளது.

இதைத் தொடர்ந்து நெகிரி செம்பிலானும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. 629 தொற்றுகளை அம்மாநிலம் பதிவு செய்திருக்கிறது.

கோலாலம்பூர் 469 தொற்றுகளையும் சரவாக் 409 தொற்றுகளையும் கண்டிருக்கிறது.

பேராக் 400 தொற்றுகளைப் பதிவு செய்திருக்கிறது.