Home நாடு செல்லியல் ஒரு வரிச் செய்திகள் : 1 மில்லியன் அஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகள் ஜப்பானில் இருந்து...

செல்லியல் ஒரு வரிச் செய்திகள் : 1 மில்லியன் அஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகள் ஜப்பானில் இருந்து வந்தன

595
0
SHARE
Ad
அஸ்ட்ரா-செனிகா தடுப்பூசிகள் மாதிரி…

மலேசியாவுக்கு 1 மில்லியன் ஆஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசிகள் ஜப்பானில் இருந்து வந்தன

மலேசியாவில் கொவிட்-தடுப்பூசிகள் போடும் திட்டம் விரைவுபடுத்தப்பட வேண்டுமென ஜப்பான் இலவசமாக வழங்கியுள்ள 1 மில்லியன் ஆஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசிகள் இன்று விமானம் மூலம் கோலாலம்பூர் விமான நிலையத்தை வந்தடைந்தன.

சரவாக் மாநிலத்தின் 50 விழுக்காடு மக்களுக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டது

சரவாக் மாநிலத்தின் 2,084,000 மக்கள் தொகையில் 50 விழுக்காடு பேர்களுக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டு விட்டது எனவும் 7.5 விழுக்காடு மக்களுக்கு இரண்டு அளவைகள் தடுப்பூசிகளும் போடப்பட்டு விட்டன என சரவாக் முதலமைச்சர் அபாங் ஜோஹாரி அறிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 1 வரை கோலாலம்பூரில் கார் நிறுத்துவது இலவசம்

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு வழக்கமாகச் செலுத்தப்படும் கட்டணம் செலுத்தப்பட வேண்டியதில்லை என்றும் இந்த சலுகை ஆகஸ்ட் 31 வரை நீடிக்கும் என்றும் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் அனுவார் மூசா தெரிவித்துள்ளார்.

கிள்ளான் பள்ளத்தாக்கின் பெரும்பான்மை பகுதிகளில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு

#TamilSchoolmychoice

எதிர்வரும் ஜூலை 3-ஆம் தேதி முதற்கொண்டு ஜூலை 16-ஆம் தேதி வரையில் கிள்ளான் பள்ளத்தாக்கின் பெரும்பான்மையான பகுதிகள் “கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின்” கீழ் வருகின்றன என தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி அறிவித்துள்ளார்.

ஹாலிவுட் தொலைக்காட்சி நடிகர் பில் கோஸ்பி விடுதலை -குற்றச்சாட்டுகளும் இரத்து

பிரபல ஹாலிவுட் தொலைக்காட்சி நடிகர் பில் கோஸ்பி மீது பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவதித்து வந்த நிலையில், நேற்று புதன்கிழமை அவர் மீதான குற்றச்சாட்டுகள் மேல் முறையீட்டில் இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.