Home நாடு கொவிட் தடுப்பூசிகள் – 10 மில்லியனுக்கும் மேல் செலுத்தப்பட்டன

கொவிட் தடுப்பூசிகள் – 10 மில்லியனுக்கும் மேல் செலுத்தப்பட்டன

621
0
SHARE
Ad

கோலாலம்பூர் :நாடு முழுமையிலும் நேற்று புதன்கிழமை (ஜூலை 7) வரையில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10 மில்லியனைத் தாண்டியது.

நேற்று வரையில் 10,036,361 அளவைகள் கொண்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில், அவற்றில் 6,999,554 முதல் தடவை போடப்பட்டவையாகும்.

எஞ்சிய 3,036,807 அளவைகள் இரண்டாவதாகப் போடப்பட்ட தடுப்பூசிகளாகும்.

#TamilSchoolmychoice

நேற்று நள்ளிரவு வரையில் ஒருநாளில் 375,843 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன.

இவற்றில் 207,795 முதல் அளவை கொண்ட தடுப்பூசிகளாகும். எஞ்சிய 168,047 அளவைகள் இரண்டாவது தடுப்பூசிகளாகும்.

மாநிலங்களைப் பொறுத்தவரை கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கையைப் போன்றே தடுப்பூசிகள் செலுத்துவதிலும் சிலாங்கூர் முதல் மாநிலமாக இருக்கிறது.

இதுவரையில் 421,384 தடுப்பூசிகள் சிலாங்கூரில் செலுத்தப்பட்டிருக்கின்றன.

நாடு முழுமையிலும் கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன.

மலேசியாவுக்கு அமெரிக்காவும், ஜப்பானும் தடுப்பூசிகளை வழங்கி உதவியிருக்கின்றன.

உலகம் முழுவதும் தடுப்பூசிகளை வழங்கும் அமெரிக்காவின் திட்டத்தின் கீழ் மலேசியாவிற்கு ஒரு மில்லியன் கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த தடுப்பூசிகள் பிபைசர் ரகத்தைச் சேர்ந்ததாகும்.

ஜப்பான் அஸ்ட்ரா ஜெனிகா இரக தடுப்பூசிகளை வழங்கியிருக்கிறது.

இதைத் தொடர்ந்து ஜூலை மாதத்திற்குள் மேலும் 12 மில்லியன் அளவைகள் கொண்ட தடுப்பூசிகள் மலேசியாவுக்குள் வந்தடையும் என கொவிட் தடுப்பூசித் திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் அறிவித்திருக்கிறார்.